TN LOGO
TITLE HOME
MAP

MAHALIR THITTAM
 

செயல்பாடு கள்

01.01.1997-ம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் திட்ட பணிகளை தொண்டு நிறுவனங்கள் (NGO) மற்றும் பஞ்சாயத்து  அளவிலான கூட்டமைப்பு (PLF)களின் பங்கேற்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Ø  9 தொண்டு நிறுவனங்கள் (NGO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Ø  19 பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள் (PLF) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Ø  நாமக்கல் மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள்

                        1. எலச்சிபாளையம்

      2. நாமக்கல்

      3. மோகனூர்

      4. பரமத்தி

      5. புதுச்சத்திரம்

      6. திருச்செங்கோடு

      7. இராசிபுரம்

      8. பள்ளிபாளையம்

      9. கபிலர்மலை   மற்றும் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகள்  

மகளிர் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

Ø  பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்த்தல்.

Ø  பெண்கள் மத்தியில் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமுதாய பொருளாதார மேம்பாடு அடையச்செய்தல்  

Ø  அரசின் நலத்திட்டப்பயன்களையும் வங்கிக்கடன்களையும் பெற ஏற்பாடு செய்தல்.

Ø  பெண்களின் வருமானத்தை உயர்த்துவதன் மூலமாக அவர்களது குடும்ப தரத்தினை உயர்த்துதல்.

Ø  பெண்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை உருவாக்குதல்.

Ø  தங்களது சுயதேவைகளை உள்கடன் மூலம் தாங்களே சரிசெய்து கொள்ளுதல்.

Ø  கடனை சரியான முறையில் திரும்ப செலுத்துவதை ஊக்குவித்தல்.

Ø  தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய வழிகளை அறியச்செய்தல்.

திட்டங்கள்

1. சமுதாய ஒருங்கிணைப்பு

2. பயிற்சி வழங்குதல்

3. மான்யத்துடன் கடன் வசதி ஏற்படுத்தித் தருதல்

4. கட்டமைப்பு வசதி

5. சந்தை வாய்ப்பு

6. ஒருங்கிணைத்தல் (Convergence)

 

1.   சமுதாய ஒருங்கிணைப்பு

 

Ø  கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்தல்.

Ø  பஞ்சாயத்து மற்றும் குடிசைப் பகுதிகளில் கூட்டமைப்பு அமைத்தல்.

சுய உதவிக் குழு

                சுய உதவிக் குழுக்கள் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 12 முதல் 20 வரையிலான நபர்களைக்கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகிறது.

Ø  ஒரே குழுவில் ஒரே குடும்பத்தில் ஒரு நபருக்கு மேலாக சேர்க்கப்படவில்லை.

Ø  வறுமையில் வாழும் பெண்கள் இலக்கு மக்களான விதவைகள், கைவிடப்பட்டோர், விவாகரத்து, ஊனமுற்ற பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குழ மக்கள் (SC/ST) மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

Ø குழுக்கள் ஊரகப்பகுதி மற்றும் நகரப்பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகிறது.

Øஊரகப்பகுதியில் முதன்மை பிரிவு, ம.தே.ஊ.வே.உ.தி (Priority) மற்றும் மாற்றுத்திறனாளிகள் என உட்பிரிவுகளில் குழு அமைக்கப்படுகிறது.

Ø  நகரங்களில் சேரிப்பகுதிகளில் குழு அமைக்க முன்னுரிமை வழங்கப்படுகிறது.

மொத்த சுய உதவிக்குழுக்கள் விபரம்

Ø  கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்ட குழுக்கள் 9161.

Ø  நகரப் பகுதிகளில் அமைக்கப்பட்ட குழுக்கள் 3775

Ø  மொத்த குழுக்கள் 13136

Ø  இவற்றில் இளைஞர் குழுக்கள் 575, தாழ்த்தப்பட்டோர் மற்றும்   

        பழங்குழயினர் குழுக்கள் 2966, மாற்றுத் திறனாளிகள் குழு 34, 

   சிறுபான்மையினர் குழு 127 மற்றும் திருநங்கைகள் குழு 5.

 

                   சுய உதவிக்குழு கூட்டம் நடைபெறுதல்

           PHOTO

                                                             

 

பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு (PLF)

Ø  பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு (PLF) ஒரே பஞ்சாயத்தில் உள்ள குழுக்கள் ஒன்றிணைந்து அமைக்கப்படும் கூட்டமைப்பு ஆகும்.  

Ø  பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு இரண்டு நிலைகளில் அமைக்கப்படுகிறது. ஒன்று குடியிருப்பு அளவிலும், மற்றொன்று பஞ்சாயத்து அளவில் ஆகும்.    

Ø  ஒவ்வொரு குடியிருப்பிலும் குறைந்த பட்சம் ஐந்து குழுக்கள் அடங்கியிருக்கும். இந்த அமைப்பினை குடியிருப்பு அளவிலான மன்றம் (Habitation Level Federation-HLF) ஆகும்.  

Ø  ஒவ்வொரு பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பிலும் குறைந்தது பத்து குழுக்கள் அடங்கியிருக்கும்.  

Ø  பத்து குழுக்கள் இல்லாத பஞ்சாயத்தில் கூட்டமைப்பு அமைப்பதில்லை. அந்த குழுக்கள் அவர்களின் விருப்பத்தின்படி அருகாமையிலுள்ள பஞ்சாயத்து கூட்டமைப்புடன் இணைக்கப்படும்.

பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் நோக்கம்

Ø  தகுதியான உறுப்பினர்களை குழுக்களில் இணைத்தல்.

Ø  குழுக்களை வலுப்படுத்துதல்.

Ø  குழுக்களை செயல்முறையில் இருக்கச் செய்தல்

Ø  குழுக்களுக்கு தகவல் அளித்தல்

Ø  குழுக்களுக்கு பயிற்சி திட்டத்தினை தயாரித்தல்.

Ø  தரமதிப்பிடுதல், கடன் மதிப்பிடுதல் மற்றும் கடன் இணைப்பு ஆகியவை சரியான நேரத்தில் ஏற்படுத்தி தருதல்.  

Øகணக்கு பராமரித்தல், தணிக்கை. பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் ஆகியவைகளுக்கு உதவி செய்தல்.

 

          PHOTO

2. பயிற்சி வழங்குதல்

Ø  குழு உறுப்பினர் பயிற்சி

Ø  தலைமைத்துவ பயிற்சி

Ø  இளைஞர்களுக்கான தொழில்திறன் பயிற்சி

Ø  தொழில் முனைவோர் பயிற்சி

Ø  பஞ்சாயத்து கூட்டமைப்பு சம்பந்தமான பயிற்சி

Ø  பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் தொழிற் பயிற்சி வழங்குதல்.

 

                   இளம்பெண்களுக்கான செவிலியர் பயிற்சி  வழங்குதல்

                   PHOTO

 

 

              மகளிர் உறுப்பினர்களுக்கு தையல் பயிற்சி வழங்குதல்

                    PHOTO

 

  பயிற்சி அளித்த விபரங்கள்

Ø  குழு உறுப்பினர் பயிற்சி வழங்கியது 12577 குழுக்கள்

Ø  ஊக்குநர் மற்றும் பிரதிநிதி பயிற்சி வழங்கியது 12674 குழுக்கள்.

Ø  பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி வழங்கியது 1080 நபர்கள் இளைஞர் / இளம்பெண்களுக்கான தொழிற் திறன் பயிற்சி

3. மான்யத்துடன் கடன் வசதி ஏற்படுத்தித் தருதல்

Ø  மகளிர் திட்ட நிதியிலிருந்தும் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்தும் ரூ.10,000/- சுழல் நிதி மான்யம் வழங்குதல்.  

Ø  பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பத் திட்டத்திலிருந்து தொழில் செய்யும் குழுக்களுக்கு பொருளாதார நிதி மான்யம் ரூ.75,000/- வழங்குதல்.  

Ø  பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிநபர் பொருளாதார நிதி மான்யம் ரூ.7,500/- வழங்குதல்.  

Ø  ரூ.50,000/- முதல் ரூ.10.00 இலட்சம் வரை வங்கி நேரடிக் கடன் பெற்றுத் தருதல்.  

Ø  மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15,000/- முதல் ரூ.50,000/- வரை

Ø  வங்கிகளிலிருந்து கடன் பெற தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தல்.

Ø  கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் ரூ.10.00 இலட்சம் முதல் அதிகபட்சம்  

Ø  ரூ.1.00 கோடி வரை வங்கிகளிடமிருந்து பெற்றுத் தருதல்.

Ø  தனிநபரின் கடன் எடுக்கும் அளவை உயர்த்தவும், குழுவின் நிதி

Ø  தன்மையை பெருக்கவும், குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டு வருகிறது.  

Ø  குழுக்கள் சுழல்நிதி அனுமதி அளவிற்கு மிகாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் கடன் பெறுவதற்கு தகுதியுள்ளது.  

Ø  சுய உதவிக்குழு உள்ளவரை சுழல்நிதி கடன் செயல்முறையில் இருக்கும்.  

Ø  சுழல்நிதிக்கு வட்டி வசூலிக்கப்படுவதில்லை.

Ø  சுழல்நிதியில் வங்கியினுடைய கடன் அளவிற்கு மட்டும் வங்கியில் கடனை வசூல் செய்யப்படுகிறது.  

Ø  6 மாதம் முடிந்த குழுவிற்கு சுழல்நிதி வழங்க தரம்பிரித்தல் (RATING) செய்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Ø  வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ள வங்கிகளில் சுய உதவிக்குழுக்களுக்கு அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக நேரடிக்கடன்களும், பெருங்கடன்களும் பெற்று தரப்படுகிறது.

Ø  59 பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடன் விபரங்கள்

Ø  11630 சுய உதவிக் குழுக்களுக்கு 3303.55 இலட்சம் சுழல் நிதிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.  

Ø  பொருளாதாரக் கடனாக 1532 குழுக்களுக்கு 3228.91 இலட்சங்கள் பொருளாதார நிதிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.  

Ø  23618 முறைகளில் 21930.91 இலட்சங்கள் வங்கிகளில் நேரடிக் கடன்கள் பெற்றுத் தரப்பட்டுள்ளது.  

Ø  20 பஞ்சாயத்து கூட்டமைப்புகளுக்கு 249.7 இலட்சங்கள் வங்கிகளிடமிருந்து பெருங்கடன் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

 

     பொருளாதார நிதிக் கடன் பெற்று தறி தொழில் செய்தல    

              PHOTO

 

                                                     சுய உதவிக் குழு- பொருளாதார      கடன்  பெற்று கீற்று முடைதல்       

   PHOTO

 

கட்டமைப்பு வசதி

Ø  குழு கட்டிடங்கள் கட்டித் தருதல்

Ø  பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு கட்டிடங்கள் கட்டித் தருதல்

Ø  கிராமச் சந்தை கட்டித் தருதல்

Ø  பூமாலை வணிக வளாகம்

Ø  தொழிற்கூடங்கள்

Ø  பதிவேடுகள் வழங்குதல்

                       PHOTO                               PHOTO

                                                        

                                                  PHOTO

வழங்கப்பட்ட கட்டமைப்பு வசதி

Ø  331 பஞ்சாயத்துக்களில் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டித் தரப்பட்டுள்ளது.  

Ø  32 பஞ்சாயத்துக்களில் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பிற்குகூடுதல் கட்டிடம் கட்டித் தரப்பட்டுள்ளது.  

Ø  கிராமத்திலுள்ள ஏழை மக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக கிராம சந்தைகள் முள்ளுக்குறிச்சி, வையப்பமலை மற்றும் வளையப்பட்டி ஆகிய பஞ்சாயத்துக்களில் கட்டப்பட்டு வருகிறது.  

Ø  நாமக்கல்லில் ஒரு பூமாலை வணிக வளாகமும், திருச்செங்கோட்டில் கூடுதல் வணிக வளாகமும், ஊரக கிராம வணிக வளாகங்கள் 9 ஊராட்சி ஒன்றியங்களில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கட்டித்தரப்பட்டு செயல்முறையில் உள்ளது.  

சந்தை வாய்ப்பு

Ø   விருப்பக் கண்காட்சி நடத்துதல்

Ø   கட்டாயக் கண்காட்சி நடத்துதல்

Ø   வெளிமாநில (SARAS) கண்காட்சி நடத்துதல்

Ø   சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக 2 கட்டாயக் கண்காட்சிகளும், 5 விருப்பக் கண்காட்சிகளும்  ஆண்டு தோறும்   நாமக்கல்   மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

Ø   மற்றும் வருடத்திற்கு 3-லிருந்து 5 முறைகள் வெளி மாநில கண்காட்சிகளில் சுய உதவிக் குழுக்களை பங்கேற்க ஏற்பாடு செய்யப்படுகிறது.  

Ø   ஊரகப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய அங்காடிகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

Ø   நடப்பு நிதியாண்டில் மட்டும் கண்காட்சி மற்றும் விற்பனை அங்காடிகள் மூலம் ரூ.109.00 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

குழு உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி

       PHOTO

 

ஒருங்கிணைப்பு (Convergence)

Ø   அரசு மற்றும் அரசு சாரா துறைகளிடமிருந்து நலத்திட்டங்களை பெறுதல் மற்றும் அவர்களுடைய திட்டங்களை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பெற்றுத் தருதல்.  

Ø   தாட்கோ, டாம்செட்கோ மற்றும் டாம்கோ ஆகிய துறைகளுடன் இணைந்து நலத்திட்டங்களை சுய உதவிக் குழுக்களுக்கு பெற்றுத் தரப்பட்டுள்ளது.  

Ø   அருகாமையிலுள்ள மாவட்டங்களிலுள்ள நிறுவனங்களை அழைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தி தொழிற்பயிற்சி பெற்ற 262   இளைஞர் / இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. 270 நபர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தர செயல்முறையில் உள்ளது.