வேளாண் அறிவியல் நிலையம்

                                                                                                                                                                 Font Help?

செயல்பாடுகள்
 

வயல்வெளிசோதனைமுதனிலை             செயல்விளக்கம்

பயிற்சிகள்

மாதிரித்திடல்கள்

விற்பனைக்குரியவை

தொழில்நுற்பத்துளிகள்

 

 
 

பொது
  நோக்கங்கள்
அலுவலர்கள்
முதல் பக்கம்
 
 
தொழில்நுற்பத்துளிகள்

விவசாயத் துளிகள்

e    இந்த கோடைக் காலத்தை கணக்கில் கொண்டு வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளுக்கு முறையே ஆட்டம்மை மற்றும் செம்மறி ஆட்டம்மை தடுப்பூசிகள் போடவும்.

e    பன்றி குட்டிகளில் இரத்த சோகையினால் (Piglet anaemia)ஏற்படும் இறப்பை தவிர்க்க, இரும்பு சத்து (Iron Dextran-3ml) மருந்தினை பிறந்த மூன்றாவது நாளும் பின்பு மூன்று வார வயதிலும் செலுத்த வேண்டும்.

e    கோடைக் காலத்தில் கிடைக்கும் மழையினை பயன்படுத்தி குறுகிய காலப் பயிர்களான உளுந்து, பாசிப்பயிறு வகையினை சாகுபடி செய்து பயன்பெறலாம். குறுகிய வயதுடைய பாசிப்பயிறு இரகமான கோ 7 மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு தன்மை உடையது. ஓரு ஏக்கர் சாகுபடி செய்ய 8 கிலோ விதை போதுமானது.

e    மானாவாரியில் பயிரிடப்படும் மரவள்ளி வறட்சியைத் தாங்கி வளர ஓரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு கலந்த கரைசலில் விதைக் கரணைகளை சுமார் 20 நிமிடம் நனைத்து நடவு செய்யவும்.

e    மனித ஆரோக்கியத்திற்கு தனிநபர், நாள் ஓன்றுக்கு 100 கிராம் மீன் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் உணவு விவசாய நிறுவனமும் நிர்ணயித்து உள்ளனர்.  ஆனால் தற்போதைக்கு இந்தியாவில் தனிநபர் நாள் ஓன்றுக்கு 40 கிராம் மீனை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.  இந்த நிலை மாற, ஓவ்வொருவரும் அன்றாட வாழ்வில் மீன் உண்டு பயன்பெற வேண்டும்.